தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

29th May 2023 06:23 PM

ADVERTISEMENT

 

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலிருந்தும் பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும் என்று அறிவித்துள்ளன. 

போக்குவரத்து த்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் இன்று (மே 29) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

போக்குவரத்து துறை, தனியார்மயமாதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னையில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

முன் அறிவிப்பின்றி நடைபெற்ற தொழிற்சங்கங்களில் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT