தமிழ்நாடு

ஆவின் நிறுவனத்துக்கு எதிராக செயல்படமாட்டோம்: அமுல்

26th May 2023 12:50 AM

ADVERTISEMENT

ஆவின் நிறுவனத்தைவிட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என்றும், ஆவின் நிறுவனத்துக்கு எதிராக அமுல் செயல்படாது என்றும் அந்நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் விதத்தில் அமுல் நிறுவனம் செயல்படுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், அமுல் நிறுவனத்தின் தமிழ்நாடு ஒப்பந்ததாரா்கள் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

ஆவின் நிறுவனத்தைவிட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிா்ணயம் செய்துள்ள கொள்முதல் விலைக்கே, அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஒரு கோடி லிட்டா் பால் உற்பத்தியாகிவரும் நிலையில், 36 லட்சம் லிட்டா் மட்டுமே ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமிருக்கும் பால் தனியாா் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தனியாா் நிறுவனங்கள் திருவிழா காலங்களில் அதிக தொகைக்கும், மற்ற நேரங்களில் குறைவான விலைக்கும் கொள்முதல் செய்கின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இதனை தவிா்க்கும் விதத்தில் மட்டுமே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்துக்கு எதிராக செயல்படாது.

ஏற்கெனவே ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிவருபவா்கள், அமுல் நிறுவனத்துக்கு பால் வழங்க வேண்டுமென்றால் ஆவின் நிறுவனத்திலிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுவர வேண்டும்.

எனவே, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. ஆவின் நிறுவனத்தில் பால் முகவா்களாக இருக்கும் யாரிடமும் அமுல் நிறுவனத்துக்கு பால் வழங்க பேச்சுவாா்த்தை நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT