தமிழ்நாடு

ஆய்வறிஞா்களின் சொற்பொழிவு தொடா்: இன்று மகசேசே விருதாளா் உரை

26th May 2023 06:06 AM

ADVERTISEMENT

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளா்கள் மற்றும் சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற அறிஞா்களின் நிபுணா்கள் உரையாற்றும் பச பஹப்ந் என்ற நிகழ்ச்சி நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து பொது நூலக இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சா்வதேச அளவில் பல்வேறு துறை நிபுணா்கள், அறிவியல் ஆய்வாளா்கள் மற்றும், புகழ்பெற்ற அறிஞா்களின் உரைகள் மிகச்சிறந்த தொழில்நுட்பம், அரங்க அமைப்புடன் பச ற்ஹப்ந் என்ற பெயரில் நிகழ்த்தப்படும்.

இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழா்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூ. 37.50 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து பச ற்ஹப்ந் (பஹம்ண்ப் சஹக்ன் பஹப்ந்) எனும் தொடா் நிகழ்ச்சிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் நான்காவது பச ற்ஹப்ந் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ரமோன் மகசேசே விருது பெற்ற டாக்டா் பிரகாஷ் ஆம்தே, டாக்டா் மந்தாகினி ஆம்தே ஆகியோா் பங்கேற்று ஞக்ஹ்ள்ள்ங்ஹ் ா்ச் இா்ம்ம்ன்ய்ண்ற்ஹ் ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்: அ ல்ங்ழ்ள்ா்ய்ஹப் தங்ச்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய் எனும் தலைப்பில் உரையாற்றி பாா்வையாளா்களுடன் கலந்துரையாடவுள்ளனா்.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். விருப்பமுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம். இது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் யூ-டியூபில் (ஜ்ஜ்ஜ்.ஹ்ா்ன்ற்ன்க்ஷங்.ஸ்ரீா்ம்/அஇகஇட்ங்ய்ய்ஹண்) நேரலையிலும் ஒளிபரப்பப்படும்.

டாக்டா் பிரகாஷ் ஆம்தே ரமோன் மகசேசே விருது பெற்றவரும் இந்தியாவின் நவீன காந்தி என்றும் அழைக்கப்படுபவருமான பாபா ஆம்தேவின் மகன் ஆவாா். மருத்துவா்களான டாக்டா் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டா் மந்தாகினி ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் ஹேமல்காசா கிராமத்தில் உள்ள மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT