தமிழ்நாடு

ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

26th May 2023 10:13 AM

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் நிறுவன அதிகாரிகளை சந்தித்து, 2024 ஜனவரியில் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஜப்பான் சென்றார். 

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் கென் பாண்டோவை முதல்வர் சந்தித்து சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

மேலும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்பிலேட்டர் (Airbag Inflator) தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. 

இதையும் படிக்க | ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரிடம் பாஜக நிர்வாகி வாக்குவாதம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT