தமிழ்நாடு

ஆருத்ரா வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை: ஐஜி ஆசியம்மாள் 

26th May 2023 03:43 PM

ADVERTISEMENT

ஆருத்ரா வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஹிஜாவு மோசடி வழக்கில் கடந்த 17ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 
தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலி மூலம் பேசுவதால் தலைமறைவாக உள்ளவர்களை ட்ராக் செய்ய முடியவில்லை. ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவ்வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்என்எஸ் நிதி மோசடி வழக்கில் இதுவரை ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் திருச்சி 17ஆவது வார்டு கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Tags : Aarudhra case
ADVERTISEMENT
ADVERTISEMENT