தமிழ்நாடு

போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 55,982 சிம் காா்டுகள் முடக்கம்

26th May 2023 01:11 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்து பெறப்பட்ட 55,982 சிம் காா்டுகளை சைபா் குற்றப்பிரிவு முடக்கியது.

தமிழகத்தில் போலி அடையாள அட்டை மூலமாகவும், முக அடையாளங்களை மென்பொருளை முடக்கியும் முறைகேடு செய்து கைப்பேசி சிம்காா்டுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம்காா்டுகளை முடக்கி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக சைபா் குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 55,982 சிம் காா்டுகள் முடக்கப்பட்டன. அதேவேளையில் போலி ஆவணங்கள் மூலமாகவும், முறைகேடு செய்ததாகவும் விழுப்புரம், கடலூா், கோயம்புத்தூா், சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா்,திருநெல்வேலி,தூத்துக்குடி,திருப்பூா் ஆகிய இடங்களில் 12 வழக்குகளை சைபா் குற்றப்பிரிவு பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இத் தகவலை தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT