தமிழ்நாடு

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி

23rd May 2023 09:30 AM

ADVERTISEMENT

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

கோயில் உண்டியல் பூட்டு உடைக்க முயற்சித்தும், சுவாமி மீது அணிவித்திருக்கும் துணிகளை கலைந்தும், சிலைகள் இருக்கும் பீடத்தின் கோபுரமும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்று விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. வழக்கம் போல் அதிகாலை நேரத்தில் கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்த பொழுது கோயிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் மற்றும் சிலைகள் மீது உள்ள துணிகளை களைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடையவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் 63 நாயன்மார்கள் மேலே உள்ள கலசங்களையும் உடைத்து எரிந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறையினர் மற்றும் அவிநாசி துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் ஆய்வு செய்ய வர உள்ளனர்.

இந்த நிலையில், சாமி சிலைகள் உடைத்து விட்டு கோயில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்து பிடிபட்டு உள்ளார்.

இதையும் படிக்க: கருமுத்து கண்ணன் காலமானார்

பிடிபட்ட நபர் வெள்ளமடை சாவக்கட்டுபாளையத்தை சேர்ந்த சரவண பிரபு(எ) சரவணபாரதி(32) என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT