தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது!
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் 97.85 சதவிகிதம் பெற்று முதலிடமும், திருப்பூர் மாவட்டம் 97.79 சதவிகிதம் பெற்று இரண்டாமிடமும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவிகிதம் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 சதவிகித தேர்ச்சியுடன் கடைசி இடம் பெற்றுள்ளது.