தமிழ்நாடு

மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

3rd May 2023 03:11 PM

ADVERTISEMENT

 

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா  உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

ADVERTISEMENT

சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 

படிக்க: நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்: வெயில் மீண்டும் அதிகரிக்குமாம்!

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டிப் பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT