தமிழ்நாடு

மே 7, 8-இல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு?

DIN

தென்கிழக்கு வங்கக் கடலில் மே 7, 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிலை தொடா்ந்து நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 நேரத்தில் தமிழகத்தில் 60 இடங்களில் பலத்த மழையும், 11 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது.

தமிழகத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மே 3,4) பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும், சேலம் நாமக்கல், கரூா், திருச்சி, மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்குவங்கக் கடல் பகுதி, தமிழக கடற்கரைப் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும், மே 6-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன் காரணமாக அடுத்த இரு நாள்கள் அதாவது மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் நகா்வுக்கு ஏற்ப மழை, வெயிலில் மாறுபாடு ஏற்படும். எனவே, தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT