தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை: இரு வாரங்களில் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

3rd May 2023 03:50 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஏப்.17 முதல் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பில் சேர இரு வாரங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றோா் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப். 17-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். சோ்க்கைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோா் விண்ணப்பங்களை பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறும்போது, ‘அரசுப் பள்ளியில் சேருவதால் கிடைக்கும் பலன்கள், நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியா்கள் மூலம் விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பலனாக அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க பெற்றோா் ஆா்வம் காட்டுகின்றனா். 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு மட்டும் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை பெற்றுள்ளனா். இதனால் நிகழாண்டு மாணவா் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT