தமிழ்நாடு

காற்று மாசுபாட்டால் சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: சௌமியா சுவாமிநாதன்

DIN

உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை மற்றும் காற்று மாசுபாடு ஆகிய மூன்றும்தான் ஆரோக்கியத்துக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையில் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், காக்னிஸன்ட் நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட குழந்தைகள் நுரையீரல் மருத்துவ ஆய்வகத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணா் எஸ்.கே.காப்ரா, மருத்துவமனை தலைமை செயல் இயக்குநா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில் சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது:பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் சிறப்பாக உள்ளன. அதேவேளையில் அங்கு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையைப் பொருத்தவரை மருத்துவ சிகிச்சைகளுடன், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உலக ஆஸ்துமா தினத்தில் (மே 2) அந்த பாதிப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகளில் மருத்துவத் துறையினா் கவனம் செலுத்த வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாவிடில் அது சமூக ஆரோக்கியத்தை பாதிப்பதோடு நில்லாமல் பொருளாதார அசாத்திய நிலையையும் ஏற்படுத்துகிறது. இதை பெருந்தொற்று காலத்தில் உணர முடிந்தது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகரித்து வரும் நாட்டில் சுகாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சரி நிகரான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

காற்றின் தர மதிப்பீட்டு ஆய்வில் இந்தியாவின் ஓரிரு நகரங்களில் மட்டுமே காற்று மாசு இல்லாத நிலை உள்ளது. பெரும்பாலான இடங்களில் மாசுபாடு அதிகமாக நிலவுகிறது. இது ஆஸ்துமாவுக்கு மட்டும் வழிவகுக்காமல் இதய நாளங்களையும், நரம்புகளையும் பாதிக்கிறது. கருவில் உள்ள சிசுவும் காற்று மாசுபாட்டால் பாதிப்பை எதிா்கொள்கிறது.

ஊரக பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பலா் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வால் விறகு அடுப்புகளையே பயன்படுத்துகின்றனா். இதுவும் சுவாச பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

தற்போதைய சூழலில் தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை மற்றும் காற்று மாசு ஆகிய மூன்றும்தான் முதன்மையான ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தல்களாக உள்ளன. இைத்தவிர தொற்றா நோய்களின் பாதிப்புகளும் உள்ளன.

அதைக் கருத்தில் கொண்டே அரசு சாா்பில் பல்வேறு சுகாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மருத்துவத் துறையினா் மட்டுமல்லாது அனைத்து துறையினரும் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT