தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் மழை: கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி! 

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த பல நாள்களாக அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை. அதனால் அணைக்குள் நீர் வரத்து இல்லை. ஆனால், தமிழக பகுதிக்கு குறைந்த அளவிலான கனஅடியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழை பெய்யாததாலும், தொடர்ந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 7.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 1.2 மி.மீ. மழையும் பெய்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பெரியாறு அணையில் 36.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மி.மீ., மழையும் பெய்தது. அணைப்பகுதியில் மழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.45 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி) நீர் இருப்பு 2,168 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 51.39 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 256 கன அடியாகவும் இருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT