தமிழ்நாடு

ஸ்டாலின் சேலம் பயணம்: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த கே.என். நேரு

10th Jun 2023 12:11 PM

ADVERTISEMENT

சேலம்: தமிழக முதலமைச்சர் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று சேலம் வருகிறார். அதையொட்டி திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என். நேரு நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம், வணிக வளாகம், நேரு கலையரங்கம், மற்றும் போஸ் மைதானம், கலைஞர் சிலை ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

மேலும் சுமார் 2000 கோடி மதிப்பிலான நலதிட்டப்பணிகளை துவக்கி வைப்பதோடு 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

இதற்காக தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக சேலத்துக்கு இன்று மாலை வருகிறார். இன்று மாலை திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மு.க. ஸ்டாலின் மறுநாள் காலை அண்ணா பூங்கா வளாகத்தில அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு அதிநவீன பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதோடு அங்குள்ள வணிக வளாகம், பெரியார் நாளங்காடி நேரு கலையரங்கம் மற்றும் போஸ் மைதானத்தையும் தமிழக முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.

ADVERTISEMENT

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் ஈரோட்டுக்கு மேம்பாலத்திற்குச் சென்ற அமைச்சர், முதல்வர் திறந்து வைக்க உள்ள கல்வெட்டுக்கள், முகப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகம், போஸ் மைதானம் போன்றவற்றை தனித்தனியே திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT