தமிழ்நாடு

நாளை அமித்ஷா வேலூர் வருகை:  ட்ரோன்கள், ராட்சத பலூன்களுக்கு தடை

DIN

வேலூர்: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகைதர உள்ள நிலையில், ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளதையொட்டி, பாஜக சாா்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்று பேசுகிறாா். 

அமித்ஷா வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதி முழுவதும் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT