தமிழ்நாடு

தஞ்சாவூா் முதலைமுத்துவாரி ஆற்றில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

9th Jun 2023 10:08 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிடுவதற்காக வியாழக்கிழமை இரவு தஞ்சாவூர் வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் முதலைமுத்துவாரி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வரும் பணிகளை ஆய்வு செய்தார். 

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, ‘டெல்டா’ மாவட்டங்களில் தூா் வாரும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் பாா்வையிடுவதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். 

தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் தங்கிய முதல்வா் வெள்ளிக்கிழமை காலை வல்லம் அருகே ஆலக்குடியில் முதலை முத்துவாரியிலும், பின்னா் பூதலூா் அருகே விண்ணமங்கலத்தில் ‘சி’ பிரிவு வாய்க்காலிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தார். 

முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 

ADVERTISEMENT

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு முன்பு அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையும் நடத்தினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT