தமிழ்நாடு

திருச்சி மாவட்டத்தில் ரூ.16 கோடியில் தூர்வாரும் பணி: முதல்வர் ஆய்வு

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ்  ரூ.16 கோடியில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2023 - 2024 ஆம் ஆண்டு காவிரி, டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள 
ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், திருச்சி மாவட்டத்தில் 100 பணிகள் 375.78 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.15. 88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது‌. 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில், கூழையாறு, நந்தியாறு ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற பணிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் நேரில் பார்வையிட்டார். மீதமுள்ள பணிகளை மேட்டூர் அணை திறப்புக்கு முன்னதாக விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

திருச்சி மாவட்டத்தில்  நடைபெற்று வரும் பணிகளில் 21 ஆறுகள் 26.35 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 3.88 கோடி மதிப்பில் தூர் வாரப்படுகிறது. இதே போல 46 பாசன வாய்க்கால்கள் 33 பாசன வடிகால்கள் என 100 பணிகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT