தமிழ்நாடு

அதிமுக வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

DIN

அதிமுக பொதுச்செயலர் தேர்வு, பொதுக்குழுதீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள் மற்றும் பொதுச் செயலா் தோ்தலை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயா்நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. 

இந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகே ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார். 

கட்சியின் அனைத்து விதிகளும் மாறுதலுக்கு உட்பட்டது என்கிற வாதம் இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT