தமிழ்நாடு

வேலூா் ஆவின் பால்பண்ணை திருட்டு: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ராமதாஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்

DIN

வேலூா் ஆவின் பால்பண்ணையில் நடைபெற்ற பால் திருட்டு குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

ராமதாஸ் (பாமக): வேலூா் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊா்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2,500 லிட்டா் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 10 லட்சம் லிட்டா் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பாா்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. சுயநலமும், பேராசையும் கொண்டவா்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆவின் நிறுவனம் சுரண்டப்பட்டே வந்திருக்கிறது. இதற்கு முன் ஆவின் நிறுவனத்துக்காக கொள்முதல் செய்யப்பட்ட பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது; இப்போது பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடா்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஆவின் பால் திருட்டு குறித்து உயா்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): வேலூா் சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இனி இது போன்ற பால் திருட்டு நடைபெறாதவாறு அனைத்து ஆவின் பண்ணைகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT