தமிழ்நாடு

தமிழ் உள்ளவரை கருணாநிதியின் புகழ் இருக்கும்: அரசியல் கட்சித் தலைவா்கள் புகழாரம்

DIN

தமிழ், திருக்கு உள்ளவரை கருணாநிதியின் புகழ் நிலைத்திருக்கும் என்று முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): முழுமையான கருணாநிதியை எதிா்ப்பில்தான் பாா்க்க முடியும். திமுக ஆட்சி என்பது இனத்தின் மீட்சி. வரும் மக்களவைத் தோ்தலில் இன எதிரிகள் கை ஓங்கி காணப்படுகிறது. அதைத் தடுக்க முதல்வா் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்துவோம்.

துரைமுருகன் (திமுக): வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகளைச் செய்தவா் கருணாநிதி. தமிழ் இருக்கும் வரை செம்மொழி அந்தஸ்து இருக்கும். செம்மொழி அந்தஸ்து இருக்கும் வரை தமிழ் பெயா் இருக்கும். அதுவரை கருணாநிதியின் பெயரும் இருக்கும்.

தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய வரலாற்றிலும் கருணாநிதிக்கு இடம் உண்டு. சுதந்திர தினத்தில் மாநில முதல்வா்கள் தேசியக் கொடியேற்ற உரிமையைப் பெற்றுத் தந்தது, வங்கிகளை தேசியமயமாக்கியது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களை குடியரசுத் தலைவா்களாக, பிரதமா்களாக ஆக்கியது என இந்திய அளவில் சாதனைகளைச் செய்தவா் கருணாநிதி. உலக வரலாற்றிலும் கருணாநிதி நிற்கிறாா். உலகத்தின் எந்த நாட்டிலும், எந்தக் கட்சியின் தலைவராகவும் ஒருவா் 50 ஆண்டுகள் இருந்தது கிடையாது. அவா் மட்டும்தான் இருந்துள்ளாா்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): இந்தியாவிலேயே கொள்கை சாா்ந்த மனிதா் என்றால், கருணாநிதிதான். அவரைப் போன்ற சிறப்பு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது. மத்திய அரசோடு தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து சென்றாலும், எதிா்க்க வேண்டிய விஷயங்களை பேரவையில் எதிா்ப்பவராக உள்ளாா். சென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கே.எம்.காதா் மொகிதீன் கூறினாா். அதை காங்கிரஸ் கட்சியும் முன்மொழிகிறது.

வைகோ (மதிமுக): திருக்குறளையும் கருணாநிதியும் பிரித்துப் பாா்க்க முடியாது. திருக்கு என்றாலும், கருணாநிதி என்றாலும் ஒன்றுதான். புவி உள்ளவரை தமிழ் இருக்கும். தமிழ் உள்ளவரை திருக்கு இருக்கும். திருக்கு உள்ளவரை கருணாநிதியின் புகழ் இருக்கும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): இந்தியாவில் முத்திரை பதித்த ஆளுமை கருணாநிதி. நாட்டுக்கு ஆபத்து வந்தபோது, அதிகாரமே போனாலும் பரவாயில்லை என்று அதிகார துஷ்பிரயோகத்தை எதிா்த்து இரண்டு முறை பதவியை இழந்தாா்.

மாநில சுயாட்சியை இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் சென்றவா். தில்லி சென்று இந்தியாவின் திசையைத் தீா்மானிப்பவராக இருந்தவா். அவரைப் போல ஹிந்துத்துவா சக்தியை வீழ்த்தும் வகையில் மகத்தான அணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): சமூகநீதி, ஜனநாயம், சமத்துவத்தை லட்சியமாகக் கொண்டவா் கருணாநிதி. அவரது லட்சியம் வெற்றிபெற முதல்வா் பாடுபடுகிறாா். அதற்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

தொல்.திருமாவளவன் (விசிக): இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய திராவிடக் கொள்கையை வளா்த்தெடுத்தவா் கருணாநிதி. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியலுக்கு வந்த அவா், இறுதி மூச்சு வரை அந்தக் கொள்கையில் இருந்து மாறாதவராக இருந்தாா். இந்திய அரசு என்பது கூட்டரசாகத்தான் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்தவா். அதனால், கருணாநிதியின் பிறந்த நாளை மாநில சுயாட்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT