தமிழ்நாடு

செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் வழங்கும் திட்டம்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஆன்லைன் வழி உரிமம் வழங்கும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

ஆன்லைனில் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகள் மட்டுமின்றி தெருநாய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தெருநாய்களை பொதுமக்கள் தத்தெடுப்பதை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை பதிவு செய்து உரிமம் பெறுவதற்கு நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, திரு.விக.நகர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஆண்டுக்கு 50 ரூபாய் பதிவுக் கட்டணமும் அதுமட்டுமன்றி நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.

இதுவரை நேரில் சென்று உரிமம் பெறும் திட்டம் இனி ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல் ஒவ்வொரு வருடமும் நாய் வளர்ப்புக்கான உரிமத்தை புதுப்பித்தல் செய்வது கட்டாயம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT