தமிழ்நாடு

வேலூரில் நூதன முறையில் தினமும் 2,500 லிட்டர் ஆவின் பால் திருட்டு?

DIN


வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் நாள்தோறும் 2,500 லிட்டர் பால் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வேலுார் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது ஆவின் பால் பண்ணை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் பெறப்பட்டு பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோன்று பால் உப பொருள்களான நெய், பால்கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் பால் பாக்கெட்டுகளை ஆவின் பண்ணையில் இருந்து முகவர்களுக்கு வாகனம் மூலம் வினியோகம் செய்ய ஓப்பந்ததாரர் நியாமிக்கப்பட்டார். கடந்த சில நாள்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கு வித்தியாசம் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை மத்தியம்(ஜூன் 6) பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்வதற்கு பல பால் வேன்கள் பாலகத்தின் உள்ளே வந்தது. 

இந்நிலையில், பால் ஏற்ற வந்த வாகன எண்களை சரி பார்த்த ஆவின் காவலாளி, ஒரே வாகன எண்ணில் இரண்டு வண்டிகள் உள்ளே சென்றதை கண்டறிந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்த போது TN23 AC 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றிக் கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இரண்டு லாரிகள் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

இந்த நுாதன பால் திருட்டு சம்பவம் குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும் போது, ஒரே வாகன எண்ணில் பால் ஏற்றிச் செல்ல இருந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். நாளை (புதன்கிழமை) இரண்டு லாரி உரிமையாளர்களிடமும் உள்ள வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளோம். விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் பால் திருட்டுக்காக நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்ற முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT