தமிழ்நாடு

1948க்குப் பிறகு.. நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 

DIN


தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் செவ்வாயன்று கோடை வெப்பம் அனலைக் கக்கியது. தமிழகத்திலேயே நேற்று அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 108 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107 டிகிரி வெயிலும் கொளுத்தியது. இதனால் சென்னை வாழ் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் தவித்துப்போயினர்.

இந்த மாத்தில், நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட்டை தொடுவது இது இரண்டாவது முறை. அதேவேளையில், கடந்த 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு வெப்பம் பதிவாவது இதுவே 7வது முறை என்று மிகப்பெரிய ஆச்சரியத்தையும் வானிலை கணிப்புகள் பதிவு செய்துள்ளன.

தமிழ்நாடு வெதர்மேன், இது குறித்துக் கூறுகையில், 1948ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலையானது 109.94 டிகிரி பாரன்ஹீட் அளவுக்குப் பதிவாகியிருந்தது. ஜூன் மாதத்தில் 108 டிகிரியை தாண்டுவது இது ஆறாவது முறை என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லவேளையாக, மாலையில் மழை மேகங்கள் சென்னை மக்கள் மீது கருணை மழையைப் பொழிந்து ஓரளவுக்கு வெப்பத்தைத் தணித்திருந்தது. இதனால் மாலை நேர வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. 

ஒரு பக்கம் இந்த வாரம் முழுக்கவே இப்படித்தான் அனல் கொளுத்தும் என்றும், நகரின் பல பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும் என்றும் இருவேறு கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) வெப்ப அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.

 கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பதிவான உச்ச பட்ச வெப்ப அளவு( டிகிரி ஃபாரன்ஹீட்): சென்னை நுங்கம்பாக்கம்-108.14, வேலூர்-107.60, சென்னை மீனம்பாக்கம்-107.6, திருத்தணி-106.7, பரமத்தி வேலூர்- 104, திருச்சி-102.92, மதுரை விமானநிலையம்-102.56, புதுச்சேரி-102.56, சேலம்-102.2, மதுரை நகரம்-102.2, ஈரோடு-101.48, திருப்பத்தூர்-101.48, தருமபுரி-101.3, பாளையங்கோட்டை-101.3, கடலூர்-100.4.

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (ஜூன் 10) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 105.8டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கேற்றார் போல இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வெயில் வாட்டுவதும் பிறகு மேக மூட்டமாக இருப்பதுமாக செல்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT