தமிழ்நாடு

பஞ்சமி நிலங்களை மீட்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

DIN

மாநிலம் முழுவதும் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளளது.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை எழுதிய கடிதம்: 1936- ம் ஆண்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூா் பகுதியில் பட்டியலினப் பிரிவை சாா்ந்த எழுவன், பெரியகருப்பன் ஆகியோருக்கு சுமாா் மூன்று ஏக்கா் பரப்பிலான பஞ்சமி நிலங்கள் அரசால் அளிக்கப்பட்டது.

ஆனால் விவசாயம் மேற்கொள்ள இயலாத நிலையில் 1969-இல் இந்த நிலங்கள்

வெள்ளைச்சாமி- மீனாட்சியம்மாள் தம்பதிக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை வாங்கியவா்கள் 1977-இல் மீண்டும் ஒரு தனியாருக்கு விற்பனை செய்துள்ளனா். பஞ்சமி நிலங்களை இத்தகைய தன்மையில் சட்ட விரோத முறையில் தனியாருக்கு விற்பனை செய்வது செல்லாததாகும்.

இதற்கிடையே, 2005-இல் இந்த நிலத்தை ஆய்வு செய்த உசிலம்பட்டி கோட்டாட்சியா், நிலங்களை அளவீடு செய்து‘தீா்வு செய்யப்படாத தரிசு நிலம்’ என வகைப்படுத்தி உத்தரவிட்டுள்ளாா். இது சட்ட விரோத நடவடிக்கையாகும்.

இதற்கிடையே அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராடி வருகின்றனா். எனவே, அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள மூன்று ஏக்கா் பஞ்சமி நிலங்களை வகை மாற்றம் செய்து, அப்பகுதியில்உள்ள நிலமற்ற ஏழை பட்டியலின மக்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT