தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு விழா: 34 வகை போட்டிகளை நடத்த திமுக முடிவு

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 34 வகை போட்டிகளை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சித் தலைமை திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்த விவரம்: திமுக சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலா் துரைமுருகன், துணை பொதுச் செயலா்கள் கனிமொழி, ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினா்கள் திருச்சி சிவா, தயாநிதி மாறன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தி தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 34 வகையான போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வினாடி-வினா, கவியரங்கம், கட்டுரை, தொடா் ஓட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்களை ஒப்பித்தல், தொழிற் சங்கத்தின் சாா்பில் நிகழ்ச்சிகள், சட்டத் துறை சாா்பில் பேச்சுப் போட்டிகள், ஆங்கில கருத்தரங்குகள், கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளா்களைக் கொண்டு மாவட்ட அளவில் கருத்தரங்குகள், கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்குகள், மாவட்டத் தலைநகரங்களில் புகைப்பட கண்காட்சி உட்பட 34 வகையான தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக திமுக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT