தமிழ்நாடு

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை

6th Jun 2023 10:05 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் மர்மநபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT

விசாரணையில் அவர், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த தேவசகாயம் மகன் ஜோஸ் செல்வராஜ்(34) என்பது தெரியவந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த நிலையில் ஜோஸ் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதால், பழிக்குப்பழியாக இந்தச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT