தமிழ்நாடு

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் சென்னைக்கு முதலிடம்: மா. சுப்பிரமணியன்

DIN

சென்னை: இந்தியாவிலேயே மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலிடம் என்று தமிழக தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் புதிய பூங்காக்களை உருவாக்குவது, பழைய பூங்காக்களை மேம்படுத்துவது உள்ளிட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் புதிய பூங்கா அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், சைதாப்பேட்டை மக்களின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளும் பயோ மெட்ரிக், சிசிடிவி என சிறிய குறைகள் இருப்பதாகக் கூறி தாக்கீதுஅனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூறப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டிஎம்இ தலைமையில் தில்லி சென்று ஒரு குழு சந்தித்துப் பேசியிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஒரு பிரச்னையும் இல்லை. அங்கீகாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த செய்தி பெரிதுப்படுத்தப்பட்டுவிட்டதே தவிர அங்கீகாரம் ரத்து எல்லாம் செய்யப்படாது.

முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும். எதற்கும் பாதிப்பில்லை. பாதிக்கும் அளவுக்கு இந்த அரசு நடந்துகொள்ளாது. இதுபோல நாடு முழுவதும் இருக்கும் 140க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு தாக்கீது அனுப்பியிருக்கிறார்கள். தாக்கீதில் வார்த்தைகள் சற்று கடினமாக இருந்தது. இது பற்றி பேசவும் சுகாதாரத் துறை அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு சந்தித்துப் பேசவிருக்கிறோம். அப்போது என்எம்சியின் இந்த நடவடிக்கை குறித்து நிச்சயம் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகள், புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில் சிறிய குறைகள் இருந்தது என்றால் அதனை சரி செய்யாமல் இருக்காது இந்த அரசு என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமரிசிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன், இபிஎஸ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமரிசித்த போது, தமிழ்நாடு வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாத,  பெரிய அளவில் கவலைப்படாதவர்கள், யோசிக்கத் தெரியாதவர்கள் விமரிசனமாகத்தான் இருக்கிறது என்று பதிலளித்திருந்தேன் என்று கூறினார்.

மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் அளித்த பதிலில், இந்தியா அளவில் 680 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தனியார், சுயநிதி மற்றும் அரசு, மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லுரிகளில் பல்வேறு தரவுகளின் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரித்து தேசிய அளவிலான சிறப்புக் குரிய கல்லூரிகள் என்ற பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்தவர்கள் 176 கல்லூரிகள்தான். இதில், 11வது இடத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி இருக்கிறது என்றால், அதற்கு முன்னாள் இருக்கும் 10 கல்லூரிகள் தனியார், மத்திய அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள். எனவே 36 மாநில அரசுகளில் எந்த மாநிலத்திலும் அரசுக் கல்லூரி முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. 11வது இடத்தில் இருப்பது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி. எனவே, இந்தியாவில் இருக்கும் மாநில அரசுக் கல்லூரிகளில் முதல் இடம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்குத்தான் என்று பதிலளித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT