தமிழ்நாடு

இன்று சென்னை சென்ட்ரல் - ஹெளரா ரயில் ரத்து

6th Jun 2023 08:50 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ஒடிஸா ரயில் விபத்தால் சேதமடைந்த ரயில் வழித்தடங்களைச் சீரமைக்கும் பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) இரவு 7.20 மணிக்கு ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12840) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷாலிமாரிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22825) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பீகார் மாநிலம் பாகல்பூரிலிருந்து புதன்கிழமை (ஜூன் 7) ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக கர்நாடகமாநிலம் யஷ்வந்த்பூர் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12254) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் மாற்றம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT