தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? முதல்வருடன் அமைச்சர் இன்று ஆலோசனை

DIN

கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்காக அரசு, தனியாா் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குறைந்தபட்சம் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனா்.

இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மேலும், பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT