தமிழ்நாடு

செம்மொழி பூங்கா மலர்க் காட்சி -  புகைப்படங்கள்

5th Jun 2023 01:43 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் இரண்டாவது ஆண்டாக மலர்க் கண்காட்சி தொடங்கி இன்றுடன் நிறைவுபெறவிருக்கிறது.

தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழிப் பூங்காவில் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு இந்த மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது.

சென்னை தேனாம்பேட்டை, கத்தீட்ரல் சாலையில் அமைந்திருக்கும் செம்மொழிப் பூங்காவில், காலை 9 மணி முதல், இரவு 8 மணி வரை, மலர்க்கண்காட்சியைப் பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுவரை மலர்க்காட்சிக்குச் செல்லாதவர்களுக்கு இன்றே கடைசி.

ADVERTISEMENT

தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் மலர்க் கண்காட்சியை கண்டுகளித்த மக்கள், தங்களது ஏகோபித்த ஆதரவையும், வரவேற்பையும் பதிவு செய்துள்ளனர். 

பொதுவாக, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களில் நல்ல குளிரான சீதோஷ்ண நிலையில் மட்டுமே பூங்காக்களில் மலர்க்கண்காட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் சென்னையிலும் மலர்க்கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த மலர்க்கண்காட்சிக்காக, ஊட்டி, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, நூற்றுக்கணக்கான வகைகளில் கண்ணைக் கவரும் வண்ண மலர்கள் சென்னை கொண்டு வரப்பட்டு, அழகிய உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பாக சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும் மலர்க்கண்காட்சியைக் காண  பெரியவர்களுக்கு ரூ.50ம், சிறியவர்களுக்கு ரூ.20ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் சென்னை மலர் காட்சி நமது செம்மொழிப் பூங்காவில் 03.06.23 முதல் 05.06.23 வரை நடைபெற்று வருகிறது. இதனை இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்து கொள்ள - https://tnhorticulture.tn.gov.in/tanhoda_new/ வசதி செய்யப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவில் நாளை தொடங்கும் மலர்க்கண்காட்சியைக் காண, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் பெறும் வசதியையும் தமிழக தோட்டக்கலைத் துறை செய்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் https://tnhorticulture.tn.gov.in/tanhoda_new/ என்ற இணையதளத்தில் மக்கள் முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

பூங்கா வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் விவரம்..
11G, 23C, 29B EXT, 60 H, 88K, AC-E18, B29N ஆகிய பேருந்துகள் இந்த பூங்கா வழியாகச் செல்லும்.

இந்த பூங்காவுக்கு அருகே இருக்கும் ரயில் நிலையமாக வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயிலில் ஏறி, ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT