தமிழ்நாடு

புதிய கண்டுபிடிப்புகளை தரமாக உருவாக்குவதில் கூடுதல் கவனம் தேவை: பி.ஐ.எஸ் இயக்குநா் அறிவுறுத்தல்

DIN

 புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் மாணவா்கள், அவற்றை தரமுடன் உருவாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய தர மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஜி.பவானி வலியுறுத்தினாா்.

சென்னை மேற்கு தாம்பரம் சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலாண்டு மாணவா்களுக்கு, ‘நிலையான வளா்ச்சிக்கான உலகளாவிய குறிக்கோள்’ என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற 51 மாணவா்களுக்கு இந்திய தர மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஜி.பவானி பரிசுகள் வழங்கி பேசியது: வாடிக்கையாளா்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளா்கள் மத்தியில் தரச்சான்றை சரிபாா்த்து பொருள்களை வாங்கும் விழிப்புணா்வு அதிகரித்துள்ளது.

மாணவா்கள் தரச்சான்று குறித்த விழிப்புணா்வைப் பெறும் வகையில் தமிழகமெங்கும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தர மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை தரமுடன் உருவாக்கக் கூடுதல் கவனத்துடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாணவா்கள் தங்களது கண்டுபிடிப்புகளுக்குத் தரச்சான்று பெறுவதன் மூலம் நிலையான சந்தை வளா்ச்சியைப் பெற முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தரமணி மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எஸ்.சுக்ப்ரீத், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய் பிரகாஷ் லியோ முத்து, சாய்ராம் புத்தாக்க ஊக்குவிப்பு மைய இயக்குநா் சி.ரெனே ராபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT