தமிழ்நாடு

சென்னை உள்பட 14 நகரங்களில் வெயில் சதம்

DIN

 தமிழகத்தில் சென்னை உள்பட 14 நகரங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வெப்ப அளவு சதத்தைக்கடந்தது.

கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பதிவான உச்சபட்ச வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்), சென்னை மீனம்பாக்கம்-108.32,சென்னை நுங்கம்பாக்கம்-107.42, திருத்தணி-106.34, புதுச்சேரி-105.08, வேலூா்-104.54,கடலூா்-104.54,நாகை102.56,பரங்கிபேட்டை-102.2,ஈரோடு-101.84,பரமத்திவேலூா்-101.3, தஞ்சாவூா் -100.4,காரைக்கால்-100.4,நாமக்கல்- 100.4,திருச்சி-100.22,மதுரை விமானநிலையம் 100.04.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி முதல் செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) வரை நான்கு நாள்கள் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 105.8 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT