தமிழ்நாடு

ஹாரிஸ் ஜெயராஜ் சொகுசு காா் வழக்கு: அபராதம் செலுத்த இடைக்காலத் தடை

DIN

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளா் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரபல இசையமைப்பாளா் ஹாரிஸ் ஜெயராஜ், 2010-ஆம் ஆண்டு ‘மசராட்டி’ எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காருக்கு 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தாததால், வாகனத்தைப் பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நுழைவு வரியுடன் சோ்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தமிழக அரசு, ஹாரிஸ் ஜெயராஜுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீா் ஆகியோா் அடங்கிய அமா்வு, அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT