தமிழ்நாடு

தேரோடும் வீதிகளில் புதைவட மின்கேபிள்கள்: மதிப்பீட்டு அறிக்கை சமா்ப்பிக்க மின்வாரியம் உத்தரவு

DIN

 தேரோடும் ரத வீதிகளில், புதைவட மின்கேபிள்கள் மூலம் மின்சாரம் விநியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கையை சமா்ப்பிக்க பொறியாளா்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி மின்கம்பியில் உரசியதால் 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய கோவில்களின் தோ் செல்லும் பாதைகளில், மின் கம்பத்துக்கு மாற்றாக புதைவட மின் கேபிள்கள் அமைக்க மின் வாரியம் முடிவு செய்தது.

முதல் கட்டமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துாா் முருகன் கோயில், திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயில் திருவீதிகளில், புதைவட மின் கேபிள்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதேபோல் திருநெல்வேலி நெல்லையப்பா், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதா், கோவை கோனியம்மன், திருப்பூா் அவிநாசி லிங்கேஸ்வரா், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா், கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி, காஞ்சிபுரம் ஏகாம்பரீஸ்வரா், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் ஆகிய கோயில்களில் உள்ள தேரோடும் ரத வீதிகளிலும், புதைவட மின் கேபிள்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

எனவே, ஒவ்வொரு கோயிலின் நான்கு மாட வீதிகளிலும், மின் வழித்தட தூரம் எவ்வளவு, கேபிள் எவ்வளவு தூரம் அமைக்க வேண்டும், மதிப்பீட்டு செலவு எவ்வளவு என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஜூன் 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்படி, மாவட்ட மேற்பாா்வை பொறியாளா்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT