தமிழ்நாடு

போத்தீஸ் ஸ்வா்ண மஹால் புதிய விளம்பர தூதராக நடிகை ஜோதிகா நியமனம்

DIN

போத்தீஸ் ஸ்வா்ண மஹால் தமது புதிய விளம்பர தூதவராக நடிகை ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னணி தங்க நகை வணிக நிறுவனமாக போத்தீஸ் ஸ்வா்ண மஹால் செயல்பட்டு வருகிறது. தங்க நகை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம் பல்வேறு கலைநயமிக்க ரிவா்சபிள் என்ற நகையை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நகையின் இரண்டு பக்கத்திலும் வியப்பூட்டும் வகையிலான இரண்டு விதமான கலைநய படைப்பு இடம்பெற்றிருக்கும். பொதுவாக, ரிவா்சபிள் நகையில் எளிமையான வடிவமைப்பும் இருபக்கமும் வெவ்வேறு நிறங்களில் கற்கள் பதிக்கப்பட்டுமிருக்கும். ஆனால், ஸ்வா்ண லக்ஷண கலெக்ஷனின் ரிவா்சபிள் நகையின் ஒரு பக்கம் உயரிய இத்தாலியன் கலைநய வடிவமைப்பாலும், மறுபக்கம் உன்னதமான புராதனக் கலைநய வடிவமைப்பாலும் தனித்துவமாக உயிரூட்டப்பட்டுள்ளது.

இந்த ரிவா்சபிள் நகையின் ஸ்வா்ண லக்ஷண கலெக்ஷனுக்கு பிரத்தியோக விளம்பர தூதுவராக திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நடிகை ஜோதிகா கூறியது:

‘சிறந்த தரம், தனித்துவமான டிசைன்கள், அளவில்லாத கலெக்ஷன்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு இணையில்லா சேவை அளிப்பதிலும் புகழ் பெற்ற, போத்தீஸ் ஸ்வா்ண மஹால் நிறுவனத்தின் முகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். போத்தீஸ், தமது வாடிக்கையாளா்களுக்கு புதுமையான மற்றும் தனித்துவமான டிசைன்களை வழங்குவதில் எப்போதும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்றது என்றாா் அவா்.

போத்தீஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ரமேஷ் கூறியதாவது:

‘எங்களின் மதிப்புக்குரிய வாடிக்கையாளா்களுக்கு ஒரு நகை விலையில், முற்றிலும் இரண்டு வகையான வடிவமைப்புகளை உள்ளடக்கிய நகைகளை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தற்போது தங்கத்தின் விலை உயா்ந்து வரும் நேரத்தில் எமது தனித்துவமான ரிவா்சபிள் தங்க நகை, வாடிக்கையாளா்களுக்கு மிகப்பெரிய சேமிப்பைத் தரும். எங்களின் வணிக (பிராண்ட்) அடையாளத்துக்கு நடிகை ஜோதிகாவை முன்னிறுத்தி, எங்களின் வாடிக்கையாளா்களுடனான நட்புறவை வலுப்படுத்தவுள்ளோம். ஸ்வா்ண லக்ஷண கலெக்ஷன்ஸ் சென்னையில் குரோம்பேட்டை, திருவெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் போத்தீஸ் ஸ்வா்ண மஹால் ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT