தமிழ்நாடு

கோவையில் தினமணி நாளிதழ் சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி!

2nd Jun 2023 12:14 PM

ADVERTISEMENT

கோவையில் தினமணி நாளிதழ்  சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி நாளிதழின் சார்பில் கோவை மாநகராட்சி 63 ஆவது வார்டில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கும் விதமாக தாகம் தணிக்க குடிநீர் மற்றும் குளிர் பானம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர்  மு. பிரதாப் மற்றும் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தனர். 

இதையும் படிக்க: சென்னையில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம்!

அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ்,மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.                

ADVERTISEMENT
ADVERTISEMENT