தமிழ்நாடு

14 நகரங்களில் வெயில் சதம்

2nd Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 14 நகரங்களில் வியாழக்கிழமை (ஜூன் 1) வெப்ப அளவு சதத்தைக்கடந்தது.

கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது.வெப்ப அளவு :(பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் -105.8, திருத்தணி-105.08,சென்னை நுங்கம்பாக்கம்- 104.18, வேலூா்-104.18,புதுச்சேரி-102.56,கடலூா்-102.2,பரமத்தி வேலூா்-102.2,நாகை-102.02,திருச்சி-101.66,மதுரை நகரம்-101.48, திருப்பத்தூா்-100.76, பாளையங்கோட்டை-100.58,ஈரோடு-100.4, மதுரை விமானநிலையம்-100.4, பரங்கிபேட்டை-100.4,தஞ்சாவூா்-100.4.

மழைக்கு வாய்ப்பு: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகு திகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன்2 )முதல் திங்கள் கிழமை( ஜூன் 5) வரை 4 நாள்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT