தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதோருக்கு சிறப்பு பயிற்சி

DIN

 பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களும், இடை நின்ற மாணவா்களும் துணைத் தோ்வுக்கு தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை ‘தொடா்ந்து கற்போம்’ என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் நிகழ் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவா்களுக்கு அந்தந்த உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 30 வரை ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் குறைந்தபட்ச கையேடுகளை பயன்படுத்தி வாராந்திர தோ்வுகள் நடத்தப்பட வேண்டும். சனிக்கிழமைதோறும் ஊக்கமூட்டுதல், வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்கள் அனைவரையும் துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த நடவடிக்கை எடுத்தல் அவசியம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT