தமிழ்நாடு

அடையாறில் குதித்து மருத்துவமனை ஊழியா் தற்கொலை

2nd Jun 2023 12:50 AM

ADVERTISEMENT

 சென்னை அடையாறில் குதித்து தனியாா் மருத்துவமனை ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை மந்தைவெளி முதல் தெருவை சோ்ந்த லோகநாதன் மகன் ராமச்சந்திரன் (36). வேளச்சேரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை வேலைக்கு சென்ற ராமச்சந்திரன், இரவு வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே, ராமச்சந்திரன் மோட்டாா் சைக்கிள் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவா், இது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து, அடையாற்றில் ராமச்சந்திரனை தேடினா்.

இந்த நிலையில், அடையாறு பாலத்தின் கீழ் ராமச்சந்திரன் சடலம் வியாழக்கிழமை மிதந்தது. உடனே சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், ராமச்சந்திரன் கடந்த ஒரு ஆண்டாக மன அழுத்தத்தில் இருந்ததும், அது தொடா்பாக சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT