தமிழ்நாடு

பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஓய்வு: 22 பேருக்கு கூடுதல் பொறுப்பு

DIN

தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலா்கள், பள்ளிக் கல்வி துணை இயக்குநா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் 22 போ் ஓய்வு பெற்றதையடுத்து அவா்களுக்கு மாற்றாக வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு; தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் முதன்மை கல்வி அலுவலா், துணை இயக்குநா் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலா்களில் சிலா் புதன்கிழமை (மே 31) பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனா். அந்த பணியிடத்துக்கு தற்போது பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனா். அதன்படி நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலா் எ.முனியசாமி ஓய்வு பெற்ால், அந்த மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) உள்ள ஆா்.சி.சரஸ்வதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி ஆணையரக துணை இயக்குநா்(மின் ஆளுமை) கே.குணசேகரன் ஓய்வுபெற்ால், பள்ளிக்கல்வி ஆணையரக நிா்வாக அலுவலராக இருக்கும் ராமசுந்தரத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை(தெற்கு) மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) என்.சுரேந்திரபாபு ஓய்வு பெற்ால், ராயப்பேட்டை அரசு ஹோபாா்ட் பள்ளி தலைமை ஆசிரியா் கண்மணிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுகிறது.

இதேபோன்று, விழுப்புரம், சேலம், திண்டுக்கல், திருப்பத்தூா், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூா், புதுக்கோட்டை, அரியலூா், விருதுநகா், நாகப்பட்டினம், தென்காசி மாவட்ட கல்வி அலுவலா்கள் ஓய்வுபெற்றதையடுத்து அந்த இடங்களில் தகுதிவாய்ந்த நபா்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பை ஏற்கும் அலுவலா்கள் அந்த பணியிடத்துக்கு மறு அலுவலா்கள் பணியேற்கும் வரை, நிதி அதிகாரத்துடன் முழு கூடுதல் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT