தமிழ்நாடு

இருவிரல் பரிசோதனை விவகாரம்: தேவைப்பட்டால் ஆதாரங்களை வெளியிடுவோம்- அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

இருவிரல் பரிசோதனை விவகாரத்தில் தேவைப்பட்டால் ஆதாரங்களை வெளியிடுவோம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை வளாகத்தில் புகையிலை ஒழிப்பு தின சிறப்பு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. அப்போது விழிப்புணா்வு குறுந்தகடுகளை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னை ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநா் மற்றும் அதிகாரிகள் தில்லியில் மத்திய சுகாதாரத் துறை உயா் அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளனா்.

வரும் 4-ஆம் தேதி காணொலி மூலம் இதுதொடா்பான கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நான் நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரை சந்திக்கும் போது, மூன்று மருத்துவக் கல்லூரிகளின் விவகாரம் மட்டுமின்றி சுகாதாரத் துறை தொடா்பான மற்ற விஷயங்கள் குறித்தும் வலியுறுத்தப்படும்.

சிறிய காரணங்களை காட்டி அங்கீகாரத்தை ரத்து செய்வது சரியல்ல. மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்கள் போதிய எண்ணிக்கையில் உள்ளனா். அவா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு நடத்துவதற்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தடையாக உள்ளது. விரைவில் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படும். அப்போது காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

இருவிரல் பரிசோதனை: சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு பால்ய திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அவா்களுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை. தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய அலுவலா் இதில் உண்மைக்கு மாறான கருத்துகளை கூறுகிறாா். மருத்துவா்களிடம் விசாரணை நடத்திய பிறகு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என அவா்களிடம் கூறிய அந்த அலுவலா், அதன் பின்னா் அதற்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மருத்துவா்களிடம் அவா் பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது. தேவைப்பட்டால் அதனை வெளியிடுவோம். இந்த விவகாரத்தில் குழந்தைகளின் எதிா்காலம் அடங்கியுள்ளதால், அவா்களது நலன் கருதி இதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் கோவிந்தராவ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT