கோவையில் தினமணி மற்றும் லட்சுமி செராமிக் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தின் சார்பாக போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கு அவர்களது தாகத்தை தணிக்கும் வகையில், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினமணி நாளிதழ் சார்பாக கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகையில் காவல் துறையினருக்கு குளிர்பானங்கள், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கோவையில் வியாழக்கிழமை தினமணி சார்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. தினமணி நாளிதழுடன் லட்சுமி செராமிக் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தினரும் இணைந்து பங்கேற்றனர்.
இதையும் படிக்க | கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினருக்கும், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை கோவை மாநகர காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன், உதவி ஆணையர் அருள் முருகன். கோவை கிழக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்த். லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் என். சுதிர். டான்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபு காந்தி குமார். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை அலுவலக முதன்மை மேலாளர் கா. தியாகராஜன். வர்த்தக பிரிவு முதன்மை மேலாளர் எம். பிரதாப். விற்பனை பிரிவு மேலாளர் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.