தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது நாளாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

1st Jun 2023 12:13 PM

ADVERTISEMENT

 

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தின்  முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக இரண்டாவது பிரிவில் 2 ஆவது நாளாக 600 மெகாவாட் மின் உற்பத்தி  தடைபட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கொப்பரை தேங்காய் கொள்முதல்:  அரசாணை வெளியீடு!

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைப்பட்டது. 

மின் கோளாறு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT