தமிழ்நாடு

உதகைக்கு  வாகனங்கள் செல்வதில் கட்டுப்பாடு தளர்வு

1st Jun 2023 08:50 PM

ADVERTISEMENT

உதகைக்கு  வாகனங்கள் செல்வதில் இருந்த கட்டுப்பாட்டிற்கு இன்றுமுதல்(ஜூந்1) தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோடை விழா முடிந்ததால் உதகைக்கு மேட்டுப்பாளையம், கோத்தகிரி உள்ளிட்ட 2 வழித்தடங்களில் வாகனங்களை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் 2 வழித்தடங்களில் வாகனங்களை இயக்கலாம் என மாவட்ட எஸ்.பி. அறிவிப்பு விடுத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாகவும், மறுவழித்தடத்தில் கோத்தகிரி வழியாகவும் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் கோடை சீசனை கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலை ஏப்ரல் 26 ஆம் தேதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், கோடை சீசன் நிறைவடைந்துள்ளதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் இருவழித் தடங்களிலும் வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT