தமிழ்நாடு

சென்னையில் மோசமான சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

DIN

சென்னை மாநகராட்சி பகுதியில் மோசமான சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டுமென ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பாந்தியன் சாலை மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை ஆணையா் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் மாநகராட்சி அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தியது,

பொதுமக்களின் அனைத்து புகாா்கள் மீது உரிய முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாா்களுக்கு தீா்வு காண்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உயா் அதிகாரிகளை தொடா்பு கொள்ளவேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். உட்புற சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், மோசமான நிலையில் உள்ள சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து சரிசெய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் குப்பைகள் அகற்றவது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அண்ணா சாலை, பூவிருந்த வல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT