தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக சார்பில் வார் ரூம் அமைப்பு

29th Jan 2023 09:52 PM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செயல்பாடுகளுக்காக திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் – கட்சித் தொண்டர்களுக்கும் உதவிடும் வகையில், திமுக சட்டத் துறை சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தராமன், எம்.எல்.ஏ., (99406-66269) மற்றும் ஈரோடு சு.இராதாகிருஷ்ணன் (98427-55335) மற்றும் வழக்கறிஞர் அர்ஜூன் (95009-92005) ஆகியோர் தலைமையில், கட்சி வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் (War Room) அமைக்கப்படுகிறது.

இதையும் படிக்க- ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாளை நிறைவு: ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

தேர்தல் பணியாற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தேர்தல் குறித்த சட்டப் பிரச்னைகள் தொடர்பாக உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT