தமிழ்நாடு

மாகாளிகுடி கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலாகலம்!

DIN


மண்ணச்சநல்லூர்: மாகாளிகுடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்தது. நீதியும், மதியூகமும் கொண்டு உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த சரித்திரப் புகழ் பெற்ற விக்கிராமதித்த மன்னனால் காடாறு மாதத்தில் போற்றி வணங்கப்பட்ட காளியம்மன் உற்சவர் விக்ரகம் இங்கு உள்ளது. 

இத்திருக்கோயிலில் கருவறையில் ஸ்ரீ ஆனந்த செளபாக்கிய சுந்தரி யாகவும், அழகும், கருணையும் ஒருங்கே நிறைந்த ஸ்ரீ அழகம்மை (செளந்தர்ய வள்ளி) எனும் உற்சவர் அம்மனாகவும், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாக எட்டு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மஹிஷாஸிரமர்த்தியாகவும் செளபாக்கிய ரூபிணியாகவும் அன்னை மாகாளி கொலு வீற்றிருக்கிறாள்.

இத்திருக்கோயில் செப்பனிடப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது ஜன.24 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை களோடு தொடங்கியது. தொடர்ந்து கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், திரவ்யாஹுதி பூஜையோடு யாக வேள்வி பூஜை தொடங்கி நான்கு கால யாக பூஜையும் மஹா பூர்னா ஹீதி, தீபாரதனை நடைபெற்றது.

இதனையடுத்து யாகசாலையிலிருந்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடும், மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மூலவர் விமானம், பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், தொடர்ந்து அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் (ஆனந்த செளபாக்ய சுந்தரி ) திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT