தமிழ்நாடு

தூத்துக்குடியில் மாட்டுவண்டி போட்டி!

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி கிராமத்தில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் இன்று நடைபெற்றது. இப்போட்டி பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.

இதில் நெல்லை, தூத்துக்குடி மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பெரியமாட்டுவண்டி பிரிவில் 11 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டிப் பிரிவில் 16 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பிரிவில் 32 வண்டிகள் என மொத்தம் 59 மாட்டு வண்டிகளும், 118 காளைகளும் போட்டியில் கலந்துகொண்டன. 

செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டிக்கு 14 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிக்கு 8 கி.மீ தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்பட்டது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னர், விவசாயிகள் தங்கள் காளைகளை வண்டியில் பூட்டி, கற்பூர ஆரத்தி காட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த போட்டிகளை ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT