தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடத்திற்கு கார் பரிசு!

DIN

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை வென்ற அபிசித்தருக்கு பரிசாக கார் மற்றும் நாட்டுமாடு வழங்கப்பட்டது.  

26 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

20 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்த அஜ்ய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கி 3 ஆம் பரிசை பெற்ற அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித்துக்கும் பைக் பரிசாக வழங்கப்பட்டது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வன் என்பவரது காளைக்கு முதல்பரிசாக கார், நாட்டுமாடு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

பொங்கல் திருநாளையொட்டி அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் 1,000 காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT