நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 33வது ஆண்டாக திருவள்ளுவர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் எஸ்.பானுமதி அறிவுறுத்தல்படி, அரசியல் அறிவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் ஆர்.சிவக்குமார், தலைமையில் கல்லூரியில் உள்ள திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் சிலையின் அருகே வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
படிக்க: சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023 - விருச்சிகம்
மேலும் திருக்குறளில் உள்ள வாழ்வியல் முறைகள், உளவியல் சிறப்புகள், வேளாண் தொழில் பெருமைகள், ஆகியவற்றை தினமும் கடைப்பிடித்து முன்னேறவும் குறளை அனைவரிடமும் பரப்பவும் உறுதிமொழி ஏற்றனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர்கள், மாணவர்கள் திருக்குறளை வாசித்து திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர்.
படிக்க: சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023 - தனுசு
இந்நிகழ்வில் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் பி.துரைசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை இணைப் பேராசிரியர் பி சக்திவேல், வழக்குரைஞர் கே.சக்திவேல், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் அ.செந்தில்குமார், இந்துஸ்தான் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இரா.ஜெகநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.